செய்திகள்

20 நிறைவேற்றப்படாது பாராளுமன்றம் கலைக்கபடலாம்

தேர்தல் திருத்தமான 20வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படாமலேயே பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன் வைத்த எம்.பிக்களின் எண்ணிக்கையை 237 ஆக அதிகரித்து முன்வைத்த யோசனைக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எம்.பிக்களின் எண்ணிக்கையை 225 க்கும் மேல் அதிகரிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லையென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் எதிர்க் கட்சியான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்டாயமாக எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது.
அத்துடன் சிறுபான்மை கட்சிகளும் தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இது நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி  பாராளுமன்றம் 20வது திருத்தம் நிறைவேற்றப்படாது கலைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையை முன் வைக்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.