செய்திகள்

20 நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றம் கலையாது, நம்பிக்கையில்லா பிரேரணையும் விவாதத்திற்கு வராது

20வது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது எனவும் அது வரை  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு வர மாட்டாது எனவும்  அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படுமென ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றம் கலையாது. அது தொடர்பாக நீங்கள் குழப்பமடைய தேவையில்லை. இதேவேளை 20 நிறைவேற்றப்படும் வரை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் வராது. என அவர் தெரிவித்தார்.