செய்திகள்

20 நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு: அமைச்சர் ராஜித அறிவிப்பு

ஓரிரு வாரங்களில் 20 வது அரசியல மைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை ஊடகங்களே கலைக்கின்றன என தெரிவித்த அமைச்சர், அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ அத்தகைய தீர்மானத்தை அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஊடகங்களின் கூற்றுக்கு நாம் பொறுப் பல்ல என தெரிவித்த அமைச்சர், எனினும் பாராளுமன்றம் கலைய வருடக்கணக்காகும் என கூறப்போவதுமில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தை நாங்கள் நடத்துகிறோம். ஊடகங்களே அதனைக் கலைக்கின்றன. பாராளுமன்றம் கலைகிறது என்பது ஊடகங்களின் கருத்து.

எனினும் ஊடகங்கள் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதே. அரசாங்கம் முறையாக செயற்படுகிறது. எனினும் ஊடகங்களுக்கு பாராளுமன்றம் கலைகிறது என்றால்தான் அது செய்தி யாகிறது. பாராளுமன்றம் கலையாது என்றால் அதை அவர்கள் ஒரு செய்தியாகவே கருதுவதில்லை. அதனால்தான் பாராளு மன்றம் கலைவதாக செய்திகளை வெளியிடுகின்றனர்.

பாராளுமன்றம் இன்றிரவு கலைகிறது என்றால் அது பத்திரிகைகளுக்கு தலைப்புச் செய்தியாகிறது. கலையாது என்றால் அந்த செய்தியைக் கணக்கிலெடுப் பதுமில்லை. இதுதான் இன்றைய நிலை. பாராளுமன்றம் கலைக்கப்படுவது விரைவிலென்றால் அது எப்போது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசாங்கமோ ஜனாதிபதியோ வருடக்கணக்கின் பின்பே பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஒரு போதும் கூறியதில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் 20 நிறைவேற்றப்பட்டதும் எப்படியும் பாரா