20 பேர்ச் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம்
காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு, தேசிய சமாதான பேரவை ஆகியோரின் ஏற்பாட்டில் பொருளாதாரத்தின் முதுகெழும்பான மலையக சமூகத்தினருக்கு 20 பேர்ச் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பிற்பகல் நோர்வூட்டில் இடம்பெற்றது.
மலையக மக்கள் சுதந்திரமாக குடியிருப்பதற்கு 20 பேர்ச் காணியும் காணி உரித்துடன் விவசாய நடவடிக்கைகளுக்காக காணியும் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு 200 வருட வாழ்க்கையில் எப்போது காணி, மலையகமே எமது தாயகம் சொந்த காணியே எமது சுதந்திரம், லயத்து வாழ்க்கை இனியும் வேண்டாம் என பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆரப்பாட்ட பேரணி நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பிக்கபட்டு நோர்வூட் நகரம் வரை சென்று அதன்பின் கலைந்து சென்றுள்ளனர்.