செய்திகள்

20 வது திருத்தத்தில் இணக்கம் ஏற்படுமா? இன்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராய்வு

20வது அரசியலமைப்பு விவாகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ தலைமையில் இந்த கூட்டம் டைபெறவுள்ளது.

20வது திருத்தம் தொடர்பாக இன்னும் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடுகள் எட்டப்படாதிருக்கும் நிலையில் அது தொடர்பாக இந்த கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

நாளைய தினம் பாராளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையிலேயே இன்றைய தினம் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.