செய்திகள்

20 வது திருத்தத்தை வர்த்தமானியில் அறிவியுங்கள்: கபே அமைப்பு கோரிக்கை

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவில் வர்த்தமானியில் அறிவிக்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு மக்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள முடியும் என கெஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் 20 வருடங்களாக எதிர்ப்பார்த்திருந்த அரசியலமைப்புத் திருத்தத்தை சீர்குலைப்பதற்கு பாராளுமன்றத்திலுள்ள சில பிரதிநிதிகள் முயற்சிப்பதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேர்தல் முறை உள்ளடக்கப்பட்ட இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதையை நிலையில் இன்னும் மூன்று வாரங்களுக்குள் இந்த திருத்தத்தை விசேட பெறும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கெஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.