செய்திகள்

20 வது திருத்தம்: சிறுபான்மையினக் கட்சிகள் கொழும்பில் இன்று சந்திப்பு

20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியக் கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் இடம்பெறும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியப்படுத்தப்படும்.

முதற்கட்டமாக கொழும்பில் அண்மையில் கூடிய தமிழ்க் கட்சிகள், இரண்டாவது கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அரசின் யோசனைக்கு மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கவும், எதிர்ப்பை வெளியிடவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் கூடி ஆராய்ந்திருந்தோம். அந்த வகையில் இரண்டாவது சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பில்  நடைபெறவுள்ளதுடன், இதில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.