செய்திகள்

20 வது திருத்தத்தின் நிலை: பிரதமருடன் ஜனாதிபதி விரிவாக ஆராய்வு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் நேற்று முன்­தினம் நீண்­ட­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்டம் முடி­வ­டைந்­ததன் பின்­னரே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

குறிப்­பாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்தல் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக தேர்தல் முறை மாற்­றத்தைக் கொண்­டு­வ­ருதல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்தில் நாட்டில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்கும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ள நிலையில் ஜூன் மாத நடுப்­ப­கு­தியில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் அதற்கு முன்­ன­தா­கவே பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­க­வேண்டும் என்று ஐக்­கிய தேசிய கட்சி கோரி­வ­ரு­கின்­றது.

ஆனால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலத்­தைக்­கொண்­டுள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக தேர்தல் முறை மாற்­றத்­தைக்­கொண்டு வந்த பின்­னரே பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றது.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயம் குறித்து மிக நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.