200 வருடங்கள் பழமை வாய்ந்த பாரிய மரம் வீழ்ந்ததில் இரு வீடுகள் முற்றாக சேதம் (படங்கள்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொயிஸ்டன் நியூட்டன் தோட்டப் பகுதியில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில், இரண்டு வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் அந்த வீட்டிலிருந்த 10 பேர் உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் 06.05.2015 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மரம் வீட்டிற்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதனால் கிராம சேவகர் மற்றும் தோட்ட அதிகாரியின் அனுமதியை பெற்று மரத்தை வெட்ட முயற்சித்த போது மேற்படி மரம் அந்த இரு வீட்டின் மீதும் வீழ்ந்துள்ளது.
எனினும் குறித்த 10 பேரும் வீட்டிற்கு வெளியே இருந்ததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையெனவும் வீடுகள் இரண்டும் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி சேதடைந்த வீட்டை திருத்தி அமைத்துக் கொடுக்கவுள்ளதாக தோட்ட அதிகாரி தமக்கு தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மரத்தை வெட்டும் போது முறையாக வெட்டாததன் காரணத்தினாலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.