செய்திகள்

20,000 பேருக்கு புலமைப் பரிசில்!

2022 ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலணைக்கு விண்ணப்பங்கள் கேரப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 334,805 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 329,668 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் உதவித்தொகை வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 20,000 ஆகும். இதில் 250 புலமைப்பரிசில்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தனது மதிப்பெண்களை மீள் பரிசீலனை செய்ய விரும்பினால், பிப்ரவரி 28 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

-(3)