செய்திகள்

2012 வெலிக்கடை சம்பவம் தொடர்பாக கோதாபயவிடம் விசாரணை

2012இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிடம் அது தொடரடபான விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012இல் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற சம்பவத்தில் கைதிகள் பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் இது தெதாடர்பாக தற்போதைய அரசாங்கம் விசேட குழுவொன்றை அமத்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் , கைதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் அப்போதிருந்த பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோதாபய ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.