செய்திகள்

2013இல் மட்டும் 5.31 பில்லியன் டொலர் இலங்கையிலிருந்து கறுப்புப்பணமாக வெளியே சென்றது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் இருந்த அதிகாரப் பலம் வாய்ந்தவர்களினால் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்ட கறுப்புப் பணம் தொடர்பாக புதிய அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த ஆட்சியில் இருந்தவர்களால், பல்வேறு நாடுகளிலும் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்தக் கறுப்புப் பணம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும். இந்தக் கறுப்புப் பணம் வெளிநாட்டுச் சொத்துக்களாக மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் நாங்கள் இவை தொடர்பாக அறிவோம், சகல தகவல்களையும் வழங்குவோம், விசேட விசாரணைப் பிரிவிற்குக்கு கிடைத்திருக்கும் சகல விடயங்களும் தெரியப்படுத்தப்படும் என அமைச்சர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில் –

முன்னைய ஆட்சியிலிருந்த உயர்மட்ட அதிகாரத்தில் இருந்தவர்களின் கறுப்புப்பணமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்படடுள்ளதாகவும்; அவர் கூறியுள்ளார்.

இதேவேளை 2013ஆம் ஆண்டில் மட்டும் 5.31 பில்லியன் டொலர் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அரசாங்கம் கணிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர் செய்திசேவை தெரிவித்திருக்கின்றது.