செய்திகள்

2014 ஆம் ஆண்டு பதவிவுகளின் அடிப்படையிலேயே தேர்தல்: ஆணையாளர் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தல் 2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலின் அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.  அதேநேரம் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை வினவி, சகல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்சிகள் தனித்தோ, அல்லது கூட்டாகவோ தேர்தலில் போட்டியிடும் முறை குறித்து தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.