செய்திகள்

2014 இல் 155 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம்

கடந்த வருடத்தில் சிறைச்சாலைகளிலிருந்து 155 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பிச் சென்றவர்களிடையே தண்டனை அனுபவித்த 124 பேரும் விளக்க மறியலில் இருந்த 31 சந்தேக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன் இவர்களில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த வருடத்தில் சிறைச்சாலைகளில் 101 கைதிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.