செய்திகள்

2014 வாக்காளர் இடாப்பின்படியே தேர்தல் நடக்கும் : தேர்தல்கள் ஆணையாளர்

எதிர்வரும் பொதுத் தேர்தல் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கமையவே நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையார் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று தேர்தல்கள்திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பான சகல வேலைகளும் பூர்த்தியாகவில்லை. இதனால் கடந்த வருடத்தின் இடாப்பின் கீழே தேர்தல் நடக்கும்.
இதேவேளை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூலை 3ம் திகதி முதல் 14ம் திகதி வரை கோரப்படவுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.