செய்திகள்

2015 உலககிண்ணத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது என்ன?- எட் ஸ்மித்

உலக கிண்ணம் என்பது எப்போதும் அணிகளிடமிருந்து பல கேள்விகளை கேட்பது. கிரிக்கெட் குறித்தும் பல கேள்விகளை அது கேட்கும். இந்த உலக கிண்ணத்தின் மூலமாக இன்றைய கிரிக்கெட்டின் நிலைமை குறித்து நாங்கள் என்ன அறிந்துள்ளோம்?

2015 உலககிண்ணம் என்பது மாபெரும் வெற்றி,சிறந்த காலநிலை, மைதானம் நிரம்பிவழியும் இரசிகர்கள்கூட்டம்,போன்ற விடயங்கள் கிரிக்கெட் இன்னமும் ஆரோக்கியமானதாக உள்ளது என்பதை புலப்படுத்தின.

50 ஓவர் போட்டி அடுத்த கட்டத்தை நோக்கிவளர்ச்சியடைந்துள்ளது என்பதும் புலனாகியது. எனினும் இந்த உலககிண்ணத்தில் எத்தனை போட்டிகள் மறக்க முடியாதவையாக, இறுதிவரை பரபரப்பானவையாக காணப்பட்டன என்ற கேள்விக்கு திருப்தியான பதிலை அளிக்க முடியாமலுள்ளது.

துடுப்பாட்டம் பலம்பெற்றுள்ளதன் காரணமாவும்,அதிகளவு ஓட்டங்கள் பெறப்படுவதன் காரணமாகவும் இறுதிவரை பரபரப்பானதாக காணப்படும் போட்டிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

சிறந்த அணி வெற்றிபெற்றதா?

ஆம்.ஆஸி அணியினர் தகுதியான வெற்றியாளர்கள்.அவர்கள் தோல்விகளிலிருந்து, அல்லது பலவீனமான நிலையிலிருந்து எவ்வளவு வேகமாக மீண்டெழுகின்றனர் என்பதே ஆஸிஅணிகள் குறித்து ஆச்சரியமளிக்கின்ற விடயம்.

2013 ஆசஸ்தொடரில் அவர்கள் ஒரு ஆஸி அணிபோன்றே தென்படவில்லை.18 மாதங்களுக்கு பின்னர் தற்போது ஆஸியின் பழைய ஆக்கிரமிப்பு உறுதிசெய்யப்படுவது போல எனக்கு தென்படுகின்றது.

209873

எந்த அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக விளையாடியது. இரசிகர்களின் மனதில் இரு கேள்விகள் இருந்தவண்ணமிருந்தன, யார் வெல்லப்போகின்றார்கள், யார் வென்றிருக்கவேண்டும் என்பதே அந்த கேள்விகள்.

அதிகளவு சனத்தொகை கொண்ட செல்வந்த நாடு சிறிய ,வறுமையான, கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தாத நாட்டை வெல்லவேண்டும் என்பதே பலரின் மனதில் உள்ள எதிர்பார்ப்பு.
நியுசிலாந்து அணி இந்த தொடரில் விளையாடிய விதத்தை அந்த அடிப்படையில் ஆராய்ந்தால், 4.4 மில்லியன் சனத்தொகையை கொண்ட நியுசிலாந்தின் பெருமளவானவர்கள் கவனம் ரக்பி குறித்தே காணப்படுகின்றது. இதன் காரணமாக கிரிக்கெட்டில் தன்னிடமுள்ள திறன் அனைத்தையும் பயன்படுத்தவேண்டிய நிலையில் அந்த நாடு காணப்படுகின்றது. இதன் காரணமாக 2015 உலக கோப்பையில் நியுசிலாந்து அணி விளையாடிய விதத்திற்காக கிரிக்கெட் உலகம் அந்த நாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும்.

எதிர்பார்த்ததை விட மோசமாக விளையாடிய அணி எது?

இந்த கேள்விக்கான விடை சுலபமானது என நான் கருதுகிறேன். சனத்தொகை,வளங்கள்உட்பட பல விடயங்களை கருத்தில்கொண்டால், உலக கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி உச்சத்தில் இருக்கவேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக இங்கிலாந்து அணி நவீன யுகத்திற்கு மாறான கிரிக்கெட்டை விளையாடிக்கொண்டிருக்கின்றது.

அடுத்த உலககிண்ணத்தில் பத்து அணிகள் மாத்திரம் விளையாடவேண்டுமா?

நிச்சயமாக இல்லை. இணைநாடுகள் அதிகளவு இடம்பெறவேண்டும் ,அவை சுவாரஸ்யமான கிரிக்கெட்டை விளையாடுகின்றன.கிரிக்கெட் மேலும் விஸ்தரிக்கப்படவேண்டும். உலகின் இரண்டாவது அதி விருப்பத்திற்குரிய விளையாட்டு கிரிக்கெட் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் விளையாட்டு உலகில் தன்னை விஸ்தரிப்பதற்கு அது கடும் போட்டியை எதிர்கொள்கின்றது. எங்களுக்கு புதிய முகங்கள், புதிய அணிகள், தேவை.

207631

இந்த தொடரில் துடுப்பாட்டத்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டதா?

பெரிய பட்கள், சிறிய மைதானங்கள் குறித்து பரவலாக சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இறுதிப்போட்டியில் அனைவரையும் கவர்ந்தவர், ஆட்டத்தின் போக்கை தீர்மானித்தவர் மிட்ச்செல் ஸ்டார்க்.

அதிரடி துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி அதேயளவு மூர்க்கத்துடன், வேகத்துடன் பந்துவீசுவதே. விக்கெட்டினை வீழ்த்துங்கள் அல்லது அடித்துநொருக்கப்படுவீர்கள் என்பதே பந்துவீச்சாளர்களின் தற்போதைய நிலை.

தென்னாபிரிக்கா முக்கிய போட்டியில் தொடைநடுங்குபவர்களா?

இல்லை. அவர்கள் பெரும் கனவுடன் உற்சாகத்துடன் விளையாடினார்கள். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரையிறுதியில் முக்கிய தவறுகளை செய்த போதிலும் தங்களால் முடிந்த அனைத்தையும் களத்தில் வெளிப்படுத்தினார்கள். ( கிரிக்கின்போ)

209871