செய்திகள்

2015 உலககிண்ணத்தை நாங்கள் வெல்வோம் என இலங்கையில் கூட எவரும் எதிர்பார்க்கவில்லை

இந்த உலககிண்ணத்தை நாங்கள்; வெல்வோம் என எவரும் கருதவில்லை, இலங்கையில் கூட அந்த எதிர்பார்ப்பு இல்லை, ஆனால் கடந்த காலங்களில் நாங்கள் இவ்வாறான நிலையை எதிர்கொண்டுள்ளோம், கடினமாக போரடி வென்றுள்ளோம், பலரின் கணிப்பை பொய்யாக்கியுள்ளோம் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேலஜெயவர்த்தன கிரிக்கின்போவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்

கேள்வி- மெதுவான ஆரம்பத்திற்கு பின்னர் இலங்கை அணியின் மனோநிலை எவ்வாறுள்ளது?
மகேல-நாங்கள் இது ஓரு நீண்ட போட்டித்தொடர் என்பதை உணரவேண்டும்.உலககோப்பை ஆறு வாரங்கள் நீடிக்கும், நீங்கள் உங்களை மெல்லமெல்ல தயார்படுத்தவேண்டும்.அணி வீரர்களை பொறுமையாகயிருக்கும்படியும் தயாராகும்படியும் கேட்டுள்ளேன். கடந்த வருடம் முழுவதும் நாங்கள் சிறப்பாகவிளையாடினோம். காயங்கள் காரணமாக பாதிப்புகள் ஏற்படாவிடில் நாங்கள் இன்னும்சிறப்பாக உலக கோப்பைக்கு எங்களை தயார்படுத்தியிருக்கலாம்.
கேள்வி- கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய நிலையில் தற்போதுள்ள நிலை அதிர்ச்சியளிக்கின்றதா?
மகேல-வெற்றிபெறுககிறோம் இல்லை என்பது ஓரு கரிசனைக்குரிய விடயமல்ல,ஏன் வெற்றிபெறமுடியவில்லை என்பதை ஆராய்வதே முக்கியம்,பதட்டப்படாமலிருப்பதும் முக்கியம்.இலங்கை அணி களத்தடுப்பில் முன்னேற்றம் காணவேண்டும்,
முக்கியமான போட்டிகளில் நாங்கள் இன்னமும் ஆக்கிரோசத்துடன் களத்தடுப்பில் ஈடுபடவேண்டும்,எமககு கிடைக்கும் கட்ச்களை பிடிக்கவேண்டும்,
பந்துவீச்சில் காயமடைந்துள்ள பந்துவீச்சாளர்களுக்கு சிறிது அவகாசத்தைவழங்கவேண்டும், மலிங்க, லக்மல் இருவரும் காயங்களிலிருந்து மீண்டுவருகின்றனர். சச்சித்திரவும் சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விளையாடவந்துள்ளார்.
துடுப்பாட்டத்திலும் சிறிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

186621கேள்வி- இலங்கை அணி உலககிண்ண போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்தியது, எனினும் நியுசிலாந்திற்கு வந்ததும் அணியின் சில வீரர்கள் தங்கள் சிறந்த நிலையை இழந்துவிட்டார்கள் என கருதுகிறீர்களா?
மகேல-நான் அப்படி நினைக்கவில்லை.முக்கிய வீரர்கள் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரங்கன சிறப்பாக பந்து வீசுகிறார்,குலசகேரவும் சிறந்த நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்,பகுதிநேர வீரர்களும் சிறப்பாக செயற்படுகின்றனர்.
நியுசிலாந்திற்கு எதிரான முதல்போட்டியில் மூன்று வீரர்கள் 50 ஓட்டங்களை பெற்றனர் அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் நாங்கள் கதைவேறு மாதிரியானதாக இருந்திருக்கும்.நாங்கள் எங்கள் தவறுகளை இன்னமும் விமர்சிக்கவேண்டும்.
நாங்கள் பல வருடங்களாக ஓரே அணியாக விளையாடிவருவதே மிகச்சிறந்த விடயம்,கடந்த காலங்களில் இவ்வாறான போட்டித்தொடர்களில் நாங்கள் மிக மெதுவாகவே ஆரம்பித்துள்ளோம்,டி 20 மற்றும் முன்னைய உலககிண்ணத்தில் இதே நிலையே காணப்பட்டது.
சில சூழ்நிலைகளில்நாங்கள் நிதானமாக இருக்கவேண்டும், திசாராபெரேரா எங்களது முக்கிய வீரர் அவர் இன்னமும் சிறப்பாக ஆடததொடங்கவில்லை, மத்யுஸ் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.ஓரு அணியாக நாங்கள் விளையாட தொடங்ன வேண்டும்.
கேள்வி- எவரும் நீங்கள் வெல்வீர்கள் என கருதவில்லை, அதற்கான அணி உங்களிடம் உள்ளதா?
மகேல-நிச்சயமாக அதற்கான அணியுள்ளது.எவரும் இந்த உலககிண்ணத்தை நாங்கள் வெல்வோம் என கருதவில்லை, இலங்கையில் கூட அந்த எதிர்பார்ப்பு இல்லை,
ஆனால் கடந்த காலங்களில் நாங்கள் இவ்வாறான நிலையை எதிர்கொண்டுள்ளோம், கடினமாக போரடி வென்றுள்ளோம், பலரின் கணிப்பை பொய்யாக்கியுள்ளோம்,
இவ்வாறான சூழ்நிலைகளில் விளையாடுவது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும்,வெற்றியும் தோல்வியும் கிட்டும்,இந்த தொடரில் நீங்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியாது,முக்கியமான தருணங்களை , முக்கியமான போட்டிகளை வெல்வதே எங்களது எண்ணம்.
நியுசிலாந்தில் விளையாடியுள்ள இக்காலப்பகுதியில் என்ன தந்திரோபாயத்தை நீங்கள் அறிந்துள்ளீர்கள்?
மகேல-காலநிலையும், ஆடுகளங்களும் சிறந்தவையாக காணப்படுகின்றன,இதனால் அதிகளவான ஓட்டங்கள் பெறப்படுகின்றன,அந்த எழு போட்டிகளில் நாங்கள் இரண்டு அல்லது மூன்றில் வெற்றிபெற்றிருக்கலாம்,காயங்கள் காரணமாக நாங்கள் பல விடயங்களை முயற்சிசெய்யவேண்டி நேர்ந்து. அதனால் எதனை செய்யகூடாது என அறிந்துள்ளோம்,
இன்னும் சிறப்பான தந்திரோபாயங்களை நாங்கள் பயன்படுத்தவேண்டும்,எங்கள் திறமைக்குள் நாங்கள் விளையாடவேண்டும்:,
எங்கள் வகை கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவேண்டும். இந்த ஆடுளங்களில் பந்தை பவுன்ஸ் செய்யகூடிய உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் இல்லை,ஆனால் வாய்ப்புகளை உருவாக்ககூடிய பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

தென்னாபிரிக்கா, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் விளையாடும்போது வித்தியாசமாக விளையாடவேண்டும், எங்களிடம் அதற்கான சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.Angelo Mathews HD Wallpapers (7)

300 ஓட்டங்களை பெறுவது இங்கு கடினமல்ல,சில மைதானங்கள்மிகச்சிறியவை, புதிய பந்துகள் காரணமாக முதல் 15 ஓவர்கள் கடினமானவை.முதல்30 ஓவர்களில் விக்கெட்களை இழக்காமலிருந்தால் பின்னர் அடித்து விளையாடலாம்,இதனால் ஆரம்பத்தில விக்கெட்களை வீழத்தி ஆட்டத்தின் நடுப்பகுதியிலும் விக்கெட்களை கைப்பற்றவேண்டும்,நியுசிலாந்து அணி இங்கிலாந்திற்கு எதிராக அதனையே செய்தது, நாங்கள் சில தடவைகள் 300 ஓட்டங்ளுக்கு அருகில் வந்துள்ளோம், ஆனால் போட்டிகளை நாங்கள் முடிக்கும் விதம் சரியாகயில்லை.