செய்திகள்

2015-உலக கிண்ணபோட்டிகளில் பந்துவீச்சு எவ்வாறு அமையவேண்டும்ஃ?

 

ஓரு நாள்போட்டிகளின் விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக உலககிண்ண போட்டிகளின் போது அணிதலைவர்கள் தற்பாதுகாப்பு மனோநிலையை கைவிட்டு எதிரணி மீது தாக்குதலை மேற்கொள்ளும் வியூகத்தை வகுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ராகுல்டிராவிட் கருத்து வெளியிட்டுள்ளார். இதனை தென்னாபிரிக்காவின் முன்னாள் அணிதலைவர் ஸ்மித் ஏற்றுக்கொண்டுள்ளார்.
புதிய விதிமுறைகள் துணைக்கண்டத்தை போல அவுஸ்திரேலியா, நியுசிலாந்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை,இரண்டு புதிய பந்துகள்,வேகபந்துவீச்சாளர்கள்,அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை, அடித்து ஆடுவதற்கு கடினமான அகலமான மைதானங்கள் ஆகியவையே இதற்கு காரணம், என தெரிவித்துள்ள டிராவிட் அணித்தலைவர்களுக்கு இவை மிகுந்த சவாலாக விளங்கப்போகின்றன,என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அணிகள் ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவேண்டியிருக்கும், பகுதிநேர பந்துவீச்சாளர்களால் பயனிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டங்களை கட்டுப்படுத்துவதை விட விக்கெட்களை எடுப்பதே அணித்தலைவர்களின் நோக்கமாக விளங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர்,உலக கிண்ணபோட்டிகள் நடைபெறும் மைதானங்களின் நிலை ஓரேமாதிரியாக விளங்காது, சில மைதானங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக மாறலாம், சில மைதானங்களில் அவர்களுக்கு சாதகதன்மை இருக்காது ஆகவே ஒவ்வொரு மைதானநிலைக்கும் ஏற்ற பந்துவீச்சாளர்களை தெரிவுசெய்வதே புத்திசாலித்தனமானது என அவர்தெரிவித்துள்ளார்.
பவர் பிளே ஓவர்களை அணிதலைவர்கள் எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்போகின்றார்கள் என்பதையும் தான் அவதானிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் முன்னாள் அணிதலைவர் கிரஹாம்ஸ்மித் களத்தடுப்பில் ஈடுபடும் அணிகள் விக்கெட்களை வீழ்த்துவதில் அக்கறைகாட்டாவிட்டால் எதிரணிசவாலான ஓட்டங்களை குவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகளத்தின் நிலையை மதிப்பிடுவது முக்கியம்,அவர்கள் அணிக்கான சிறந்த தளம் ஓன்றை அமைத்தால் இறுதிஇருபது ஓவர்களில் ஓட்டங்களை பெறலாம்,ஆரம்பத்தில் விக்கெட்களை இழக்காமலிருப்பது நல்லது,விக்கெட்களை கைப்பற்ற கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் அவசியம்,என்றும் அவர் தெரிவித்துள்ளார்.