செய்திகள்

2016ல் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்று நிருபம் இன்று வெளியாகும்

2016ம் ஆண்டுக்கு பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய சுற்று நிருபம் இன்று  கல்வி அமைச்சினால் வெளியிடப்படவுள்ளது.
இதன்படி தமது பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக  கல்வி அமைச்சு புதிதாக சுற்று நிருபமொன்றை தயாரித்திருந்த போதும் பின்னர் அந்த சுற்று நிருபத்தை நீக்கி கடந்த வருடத்தில் பயன்படுத்திய அது சுற்று நிருபத்தை பயன்படுத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்றைய தினம் அந்த சுற்று நிருபம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.