செய்திகள்
2016இல் இலங்கையில் 153 பேருக்கு HIV
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி தொடர்பான போதிய விளிப்புணர்வு இல்லாமையே இவர்கள் இந்த தொற்றுக்கு இலக்காக காரணம் என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களில் பெண்களை விடவும் ஆண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. -(3)




