செய்திகள்

2016ம் ஆண்டின் தாதா சாகேப் பால்கே விருது கே. விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் திரைப்பட துறையில் வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இது ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும். இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பணிகளுக்காக ஆற்றிய ஒருவரது பங்களிப்பிற்காக இந்த விருது அவரை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் தங்க தாமரை மற்றும் ரூ.10 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். கடந்த 2016ம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இயக்குநர் மற்றும் நடிகரான கே. விஸ்வநாத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சலங்கை ஒலி, சுபசங்கல்பம், சங்கராபரணம் மற்றும் சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே. விஸ்வநாத். காசிநாதுனி விஸ்வநாத் என்ற இயற்பெயரை கொண்ட அவர் கடந்த 1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், பாலிவுட் பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். அதனுடன் உத்தம வில்லன், யாரடி நீ மோகினி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.201704241900227407_Dada-Saheb-Phalke-award-2016-goes-to-K-Viswanath_SECVPF