செய்திகள்

2018க்குள் சகல மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் : அமைச்சரவையில் அங்கீகாரம்

2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் படி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் செய்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணியை 2018 ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க அரசாங்கம் எண்ணியுள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 60 விடுதிகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிலையங்கள் என்பவற்றில் காணப்படும் 62மூ விடுதி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்.
எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளப்படும் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை தொடரும் மாணவர்கள் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் காணப்படும் பொதுப் பிரச்சினையான விடுதி பற்றாக்குறையினை நிவர்த்திக் நோக்கில் 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் 16 விடுதிகளை அமைப்பதற்கு  உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்குஅமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.
n10