செய்திகள்

202 வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் முயற்சி வீணானது

ஐ.பி.எல். தொடரில் இன்றைய முதல் போட்டியில் ஐதராபாத்ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி தலைவர் வாட்சன் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பபெடுத்தாடிய செய்த ஐதராபத் அணி 201 ஓட்டங்களை குவித்தது.

202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரகானே வார்னர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் இரண்டு நான்கு ஓட்டங்களை பெற்ற ரகானே கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வாட்சனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். வாட்சன் 12 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த கருண் நாயர் 4 இ ஹுடா 7 ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்மித் சிறப்பாக விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அலருடன் ஜோடி சேர்ந்த பால்க்னர் அதிரடியாக விளையாடினார். ஸ்மித் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் பால்க்னருடன் சேர்ந்து அதிரடி காட்டினார். ஸ்மித் ஆட்டமிழந்தபோது ராஜஸ்தான் அணி 14.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை எடுத்திருந்தது. வெற்றிக்கு 34 பந்தில் 81 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரின் முதல் பந்தில் பால்க்னர் வெளியேறினார் அவர் 19 பந்தில் 2 நான்கு 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்தார்.

அடுத்து சாம்சனுடன் மோரிஸ் ஜோடி சேர்ந்தார். சாம்சன் 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் 4-வது பந்தில் போல்டாகி வெளியேறினார். அவர் 3 சிக்சருடன் 21 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 40 ஓட்டங்கள்வைப்பட்டது. 19-வது ஓவரை பிரவீண் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மோரிஸ். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 9 பந்தில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரின் கடைசி 3 பந்தில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் 18 தேவைப்பட்டது. ஆனால் மோரிஸ் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடிக்க கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுக்கஐதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.