செய்திகள்

2020இல் ஜனாதிபதி தேர்தல் இருக்காது

அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமென்ற உறுதியுடனேயே இருப்பதாகவும் இதன்படி அதனை செய்வோம் எனவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யார் என்ன கூறினாலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. இதன்படி நிறைவேற்று முறை இல்லாது செய்யப்படும். இதன்படி 2020இல் ஜனாதிபதி தேர்தலும் நடக்காது என அவர் தெரிவித்துள்ளார். -(3)