2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9ஆம் தர மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியானது. இதன்படி 14 வயது மாணவர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவனே இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.
இந்த மாணவன் மூன்று பிள்ளைகளில் குடும்பத்தில் மூத்தவர் எனவும் அவரின் பெற்றோர் ஆசிரியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேவம் குருகுல வித்தியாலயத்தில் படித்த அவர், அதன் பின்னர் நானமல் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றார்.
இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 8ஆம் தரம் கல்வி கற்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி, 6 மாதங்களுக்கு பின், 9 தரத்தில் க பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.இந்நிலையில் உயர்தர பிரிவில் இவர் மூன்று B சித்திகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.(15)




