2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்
2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.இதேவேளை இந்த வருடம் 10 கைதிகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.(15)




