செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

சாட்சிகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்ததுடன், அந்த அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட சிலருக்கு எதிராக பரிந்துரைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை முன்னாள் பிரதமர் தொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கையெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)