செய்திகள்

21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படலாம்?

நாடு பூராகவும் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் உளள அதிஅபாய வலயங்களாக கருதப்படும் 6 மாவட்டங்களில் 4 மாவட்டங்களை தவிர மற்றைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அதிக அபாயமுள்ள மாவட்டங்களான கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக இந்த மாத இறுதியில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. ஆனபோதும் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினாலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைய அங்கு கடும் நிபந்தனைகளுடனேயே ஊரடங்கு தளர்த்தப்படும்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் 19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்பதுடன் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா என்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். -(3)