செய்திகள்

மைத்திரி , மஹிந்த சந்திப்புக்கு மஹிந்த தரப்பிடமிருந்து நிபந்தனைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதானமாக இரண்டு நிபந்தனைகளை அடிப்படையக கொண்டு நடைபெறவுள்ளதாக முன்னாள் அமைச்சார் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
அதாவது எந்தவொரு தரப்பினருடனும் தேசிய அரசாங்கம் அமையப்பெறக் கூடாது , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ள கட்சிகளுடனேயே அந்த அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற மஹிந்த தரப்பினரின் நிபந்தனையை அடிப்படையாக கொண்டே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த விடயத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால இணங்கினால் சநடதிப்புக்கள் தொடரும் இல்லையென்றால் அத்துடன் சந்திப்பு நின்றுவிடும்;  என காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.