செய்திகள்

ஜனாதிபதி ரணில் ஜப்பான் – பிலிப்பைன்ஸ் பயணத்தை ஆரம்பித்தார்!

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஜப்பான் நோக்கி பயணமானார்.

2 நாட்கள் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸுக்கு பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Bongbong Marcos உடனும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa உடனும் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

-(3)