செய்திகள்

23 வருடங்களாக இதற்காகத்தானே காத்திருந்தோம்

டேல் ஸ்டெயின் உரத்த குரலில் சத்தமிடும்போதும்,தென்னாபிரிக்க வீரர்கள் ஒரு ஓட்டத்தை தடுப்பதற்காக பந்தின் மேல் பாயும்போதும், இம்ரான் தாஹிர் விக்கெட்டினை வீழ்த்திய பின்னர் கொண்டாடும் விதத்திலும் தென்னாபிரிக்காவின் நம்பிக்கை புலப்படும், புலப்படுகின்றது.

இன்னும் எட்டு நாட்களில் நாங்களே உலககிண்ணத்தை கைப்பற்றபோகிறோம் என டேவிட் மில்லர் தெரிவித்தார்.2015 உலக கோப்பை ஆரம்பமான வேளை தென்னாபிரிக்கா தனது நீண்ட நெடுங்கனவை சாத்தியமாக்குவதற்கு எட்டு வாரங்கள் இருந்தன.ஆனால் தற்போது நாட்கள் நெருங்கிவிட்டன,தென்னாபிரிக்கா உலககிண்ணத்திற்கு இவ்வளவு நெருக்கத்தில் வந்ததில்லை.

அவர்களு;கு நம்பிக்கையை அளிப்பதற்கு இதுவே போதுமானதாக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதுவே எங்களுக்கு எல்லாம் என்கின்றார் டேவிட் மில்லர்,இது எனக்கு முதலாவது உலககி;ண்ணம், அதில் அரையிறுதியில் விளையாடுவது என்பது, எனது கனவு,அவ்வாறான நிலையிருப்பது என்பதே ஓரு வரப்பிரசாதம்,என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

208843
தென்னாபிரிக்க வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக போராடியுள்ளனர். பலருக்கு இதுவொரு கனவு,எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த உலககிண்ணப்போட்டிகளில், போட்டிகளுக்கு முன்னதாகவே தென்னாபிரிக்க அணி மீது சுமத்தப்பட்ட எதிர்பார்ப்புகள் அளவுக்கதிகமானதாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இம்முறை அவர்கள் அதனை சமாளிப்பதற்கு பழகியுள்ளனர்.அணியில் பல புதிய வீரர்கள் உள்ளனர்,முதல்தடவை உலககிண்ணத்தில் விளையாடும் வீரர்கள் அவர்கள், அதனால் கடந்த காலசுமைகள் எங்களிடம் இல்லை என்கிறார் அவர்.

இந்த வீரர்களில் குறிப்பிடத்தக்க ஓருவர் வேகப்பந்துவீச்சாளர் கைல் அபொட், அவர் அணியில் இணைக்கப்பட்ட ஓவ்வொரு தடவையும் தன்னை நிரூபித்துள்ளார். கடந்த சில நாட்களாக எங்கள் மத்தியில் புத்துணர்ச்சி தென்படுகின்றது,விமர்சகர்கள் எங்களால் முடியாது என தெரிவித்ததை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்,ஆகவே அணி இத்துடன் ஓய்ந்துவிடப்போவதில்லை,இது எங்களை அடுத்த இலக்கு நோக்கிகொண்டுசெல்லப்போகின்றது,சூழ்நிலை எவ்வாறானாதாக இருந்தாலும், எதிரணி எப்படிப்பட்டதாக இருந்தாலும் எங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்கிறார் அபொட்.

இந்த நம்பிக்கையை வழிநடத்திச்செல்பவர் அணித்தலைவர் டிவிலியர்ஸ்.துடுப்பாட்டம் மூலமாக அணிக்கு நம்பிக்கையை ஊட்டும் அதேவேளை கண்ணிற்கு தெரியாத அவரது செயற்பாடுகள் அணியை பலப்படுத்துகின்றன.

வெற்றி பெறுவது குறித்து அவர்கொண்டுள்ள வேட்கையும்,அவரது அணி குறித்த கொண்டுள்ள பற்றும் அற்புதமானது, அணியினரும் அந்த திசையில் பயணிக்கின்றனர் என்கிறார் அபொட் இலங்கை அணியுடனான போட்டியில் நாங்கள் அதனை வெளிப்படுத்தினோம்,குறி;ப்பாக களத்தடுப்பில், தடுக்க முடியாத கடினமான பந்துகளை கூட தடுக்க முயன்றோம்,எங்கள் அணி தலைவர் எங்களிடமிருந்து அதனையே எதிர்பார்க்கின்றார். வாய்ப்புகளை உருவாக்குமாறு அவர் எங்களை கேட்டுக்கொள்கிறார், நாங்கள் அதனை செய்கிறோம்,இறுதியில் அனைத்து வாய்ப்புகளை உருவாக்கினோம், தற்போது எங்கள் மத்தியில் நம்பிக்கை காணப்படுகின்றது,என அபொட் மேலும் தெரிவித்தார்.
அiரையிறுதியில் வெற்றிபெறுவதற்காக அணிஅணைத்தையும் செய்கின்றது. அணியின் ஆலோசகர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கரிகேர்ஸ்டன், மைக்ஹசி,உட்பட அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.மூர்க்கமாக தயாராகின்றது தென்னாபிரிக்கா