செய்திகள்

23 வருடங்களின் பின் விசேட அதிரடிப் படையால் விடுவிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு

வவுனியாவில் விசேட அதிரடிப்படையில் கட்டுப்பாட்டின் கீழ் 23 வருடங்களாக இருந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நெற் கஞ்சியசாலையில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லினை களஞ்சியப்படுத்த வசதிகள் அற்ற நிலை நீண்டகாலமாக காணப்பட்டது. இதனால் வவுனியா, பூங்காவீதியில் விசேட அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த நெற் களஞ்சியசாலையை விடுவிக்குமாறு கோரப்பட்டு கடந்த 31 ம் திகதி அது விடுவிக்கப்பட்டது.

வவுனியா வேப்பங்குளம், ஓமந்தை, மடுகந்தை ஆகிய பகுதிகளில் உள்ள நெற்களஞ்சியசாலைகளில் இடவசதி போதாமையால் தற்போது விடுவிக்கப்பட்ட களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட இக் களஞ்சியசாலையில் 3,000 மெற்றிக் தொன் நெல்லினை களஞ்சியப்படுத்தக் கூடிய வசதிகள் உள்ள போதும் இங்குள்ள இரு களஞ்சியசாலைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது நெல் கொள்வனவு இடம்பெறுகின்ற போதும் இதனை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களஞ்சியசாலை வசதிகள் போதாமையால் வவுனியாவின் நெடுங்கேணி பகுதி விவசாயிகளுக்கு அப்பகுதியில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உதவியுடன் 6 களஞ்சியசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

1

1

 N5