செய்திகள்

234 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் நாளையுடன் முடிகின்றது ஆயுட்காலம் நீடிக்கப்படவில்லை! சபைகள் தானாக கலையும்

நாளை 15ம் திகதியுடன் முடிவடையவுள்ள உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் நீடிக்காதிருப்பதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 234 உள்ளுராட்சி சபைகள் நாளையுடன் தானாக கலையவுள்ளது.

ஜனாதிபதியினால் உள்ளுராட்சி சபைகளின் ஆயுட் காலத்தை நீடிக்காது இருப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுட்காலம் முடிவடையும் உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளை தேர்தல் நடத்தப்படும் வரை விசேட ஆணையாளர்களின் கீழ கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.