செய்திகள்

பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 07 விக்கெட்களால் இந்தியா வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணித்தலைவர் பாபர் அஸாம் 50 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 49 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் ரோஹித் சர்மா 86 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்.

-(3)