செய்திகள்

237 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பொகவந்தலாவை மாணிக்கக்கல் சுரங்கம் (படங்கள்)

நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ செப்பல்டன் தோட்ட பிரதேசத்தில் 09 ஏக்கர் நிலபரப்பினை கொண்ட மாணிக்ககல் சுரங்கம் 237 மில்லியன் ரூபாவுக்கு ஏலமிடபட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ அமரசிறி தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில் அதிகளவில் ஏலமிடப்பட்ட சுரங்கம் இதுவென அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஏல விற்பனை கடந்த 02 ஆம் திகதி ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கதிர்காமம், தம்மென்னாவ, பிரதேசத்தில் இனங் காணப்பட்ட மாணிக்கக்கல் சுரங்கம் 270 மில்லியன் ரூபாய்கு விற்பனை செய்யபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இந் நிலையில் தற்சமயம் குறித்த மாணிக்கக்கல் சுரங்கத்தின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரத்தினகல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ அமரசிறி மேலும் தெரிவித்தார்.

DSC03123