செய்திகள்

24ஆம்திகதி குற்றப்புலனாய்வு திணைகளத்தினரால் பசிலை விசாரிக்க ஏற்பாடு

எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் வசித்துவரும் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணியே இத்தகவலை தகவல் திணைக்களத்துக்கு   அறிவித்துள்ளார்.

மேலும் பசில் நாட்டுக்கு வருவதில் எந்தபிரச்சினையுமில்லை. அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க தயாராக இருக்கிறார்.

இந்த விடயத்தை சட்டமாஅதிபர் மற்றும் பொலிஸ்மாதிபருக்கும் அறிவித்துள்ளதாக அவர் திணைக்களத்தில் கூறியுள்ளார்.