செய்திகள்

24 ஆம் திகதி இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் தமிழக மீனவர்களுக்குமிடையிலான 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தையை எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழகத்தில் நடத்தலாம் என தமிழக அரசு இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளது.

எனினும் இன்றைய தினம் வரை இது குறித்து இலங்கையி லுள்ள இந்திய தூதரகம் உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கவில்லை என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இலங்கை தமிழக மீனவர்கள் இடையே மீன்பிடிப்பது தொடர்பாக உள்ள பிரச்சினைகளை இரு நாட்டு மீனவர்கள் பிரதிநிதிகள் ஏற்கனவே 2 கட்டமாக கொழும்பிலும் தமிழகத்திலும் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான 3 வது கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 5 ஆம் திகதி நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

கடந்த 11 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முன்னர் அறிவிக் கப்பட்டது. எனினும் பேச்சு நடத்தப்படாமல் பிற்போடப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த தமிழக அரசு விருப்பம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி யுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது