24 படம் வெற்றி படமா? தோல்வி படமா?
சூர்யா 3 வேடங்களில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்த படம் 24. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, இந்த படம் சுமாரான லாபம் தந்தது என ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை கூறியது.
இதை நம் தளத்தில் நேற்று வெளியிட்டு இருந்தோம், ரசிகர்கள் பலரும் 24 வெற்றி படம் தான் என கருத்து தெரிவித்தனர்.
நாம் விசாரித்த வரையில் 24 தமிழகத்தில் 22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் தமிழகத்தில் சுமாரான லாபம் தான்.
ஆனால், ஆந்திரா, கேரளாவில் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது, பல கோடி லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது, அதேபோல் அமெரிக்க மற்றும் மலேசியாவிலும் இப்படம் நல்ல வசூலை தந்துள்ளது.
இதை வைத்து பார்க்கையில் 24 தமிழகத்தில் சுமார், வெளி மாநிலங்கள் வெளி நாடுகளில் சூப்பர் ஹிட்.
N5




