செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழும், 1ஆம் கட்டத்தின் கீழும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்

கொழும்பு மாவட்டம் – சீதாவக, பாதுக்க
களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை

காலி மாவட்டம் – எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல

கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க

இரத்தினபுரி மாவட்டம் – எஹலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத்த, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள்

பதுளை மாவட்டம் – எல்ல, ஹாலிஎல, பசறை

காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ

களுத்துறை மாவட்டம் – பேருவளை

கேகாலை மாவட்டம் – கலிகமுவ

குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இது எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது காற்று வீசும். மேலும், 30 முதல் 40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-(3)