செய்திகள்

25 மாணவர்கள் மயக்கம்! பாடசாலையின் தண்ணீர்த் தொட்டிக்குள் நஞ்சு கலப்பு!

ஏழாலை ஸ்ரீமுருகன் மகா வித்தியாலயத்தின் தண்ணீர் தாங்கிக்குள் இனந்தெரியாதோர் நஞ்சு கலந்துள்ளனர்.

இதனால் இன்று வியாழக்கிழமை அந்த நீரைப் பருகிய சுமார் 25 வரையிலான மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

தண்ணீர்த் தொட்டிக்குள் கலக்கப்பட்ட நஞ்சின் போத்தலும் கிடக்கின்றது எனத் தெரியவருகின்றது. சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். –