செய்திகள்
25,000ரூபா தண்டப்பணத்தில் இரண்டு விடயங்களை நீக்க இணக்கம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்குமிடையே இன்று முற்பகல் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீதி ஒழுங்குவிதிகள் தொடர்பான தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் யோசனையில் இரண்டு விடயங்களை நீக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இடது பக்கமாக முந்திச் செல்லுதல் மற்றும் வேக விடயம் தொடர்பான விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




