செய்திகள்

27முதல் 30வரை திருகோணமலையில் காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணை

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் அடுத்த விசாரணை அமர்வு இம்மாதம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

இம்மாதம் 27ஆம் திகதிமுதல் 30 ஆம்  திகதிவரை இவ்வமர்வு நடைபெறவுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

27,28 ஆகிய இரண்டு தினங்களிலும் திருகோணமலை மாவட்டசெயலகத்திலும், 29,30 ஆகிய இரு தினங்களும் மூதூர் பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த நான்கு நாட்களிலும் மக்கள் முறைப்பாடு மற்றும் விசாரணைகளில் கலந்துகொள்ளமுடியும் எனவும் குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.