செய்திகள்

27 இலட்சம் ரூபா பெறுமதியான மோதிரத்தை தொலைத்த எம்.பி : தகவல் வெளியிடும் பிரதமர்

பாராளுமன்றதில் கடந்த திங்கட் கிழமை இரவு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒருவரின் மோதிரமொன்று காணாமல் போயியுள்ளதாகவும் அதன் பெறுமதி 27 இலட்சமாகுமெனவும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் திருடர்கள் யார் என்பது தெளிவாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று பதுளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயெ அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தரை விரிப்பில் அங்கம் புரள்வதை நிறுத்தி கதிர்காமத்துக்கு சென்று அங்கம் புரளுங்கள் அப்போதாவது பாவங்கள் தீரட்டும். இவ்வாறாக அன்று இரவு பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரின் மோதிரமென்று காணாமல் போயுள்ளதாம்.
அதன் பெறுமதி 27 இலட்சமாம். இவ்வளவு பெறுமதியான மோதிரம் தனது சொத்துக் கணக்கில் உள்ளடக்கப்பட்டுள்ளதா தெரியவில்லை. 27 இலடசம் பெறுமதியான மோதிரத்துடன் பாராளுமன்றத்திற்கு ஒருவர் வருகின்றார் என்றால் அதன் மூலம் யார் திருடன் என்பது தெளிவாகின்றது. என பிரதமர் தெரவித்துள்ளார்.