செய்திகள்

27 தடவை தோற்ற ரணிலே ஓய்வு பெறவேண்டும் ஒரு தடவை தேற்ற மஹிந்த அல்ல : சுசில் கூறுகின்றார்

மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு தடவையே தோற்றார் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ 27 தடவைகள் தோற்றவர் இதன்படி பார்த்தால் வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்க வேண்டியவர் ரணில் விக்கிரமசிங்கவே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்‌ஷ வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே சுசில் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு தடவையே தோல்வி கண்டுள்ளார் அவர் ஓய்வெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க 27 தடவைகள் தேர்தலில் தோற்றுள்ளார் அப்படியென்றால் ஓய்வெடுக்க வேண்டியவர் ரணிலே ஆகும்.

தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வி கண்ட ரணில் விக்கிரமசிங்க 2010இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை களமிறக்கினார் அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கினார். தற்போது அவர் கண்ணாடிக்கு முன் நின்று கல்லெரிந்துக்கொண்டிருக்கின்றார். என அவர் தெரிவித்துள்ளார்.