செய்திகள்

275 தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை? சட்மா அதிபர் ஊர்ஜிதம் செய்தார்

தடுப்புக்காவலிலுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரி­வினர் குழு­வினைக் கொண்ட சொலி­சிட்டர் ஜெனரல் குழுவின் முதல் கூட்டம் நேற்றும் கூடி­யுள்­ளது.

அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தையின் போது 275 அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் சட்ட மா அதிபர் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தினார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­விக்­கையில்,

“தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் கடந்த வாரம் சொலி­சிட்டர் ஜெனரல் சுகத கம்­லத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்­ததன் பிர­காரம் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் ஆராய்­வ­தற்­கான மூவ­ர­டங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­ட­துடன் நேற்று பிற்­பகல் இக்­கு­ழுவின் முதற்­கூட்டம் இடம்­பெற்­றது.

பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரி­வினர் மற்றும் சட்ட மா அதிபர் குழு­வினை உள்­ள­டக்­கிய இக்­கு­ழு­வி­ன­ரிடம் தமிழ் அர­சியல் கைதி­களின் விப­ரங்கள் அனைத்­தையும் நான் முன்­வைத்­தி­ருந்தேன். கடந்த சந்­திப்­பின்­போது தடுப்புக் காவலில் உள்ள எமக்கு கிடைத்த 275 அர­சியல் கைதிகள் தொடர்பில் வெ ளிப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். அதற்­க­மைய நேற்று இக்­குழுக் கூட்­டத்தின் போது நான் முன்­வைத்த அர­சியல் கைதி­களின் எண்­ணிக்கை சரி­யா­ன­தெ­னவும் அவர்­களின் அறிக்­கையில் இருக்கும் எண்­ணிக்­கையும் சரி­யா­ன­தெ­னவும் இக்­கு­ழு­வினர் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

குறிப்­பாக அர­சியல் கைதிகள் மூன்று பிரி­வு­களின் கீழ் உள்­ளனர். அர­சியல் கைதி­களில் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­ட­வர்கள், நீதி­மன்றில் வழக்கு உள்­ள­வர்கள், தண்­டனை வழங்­கப்­பட்­ட­வர்கள் என உள்ள நிலையில் அவர்­களின் விப­ரங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம். எனவே இந்த 275 தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் சட்ட மா அதிபர் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் எதிர்­வரும் மார்ச் 31ஆம் திகதி இடம்­பெ­ற­வி­ருக்கும் இரண்­டா­வது குழுக் கூட்­டத்­தின்­போது இவ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அதேவேளை, இந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான சகல அறிக்கைகளும் கைதிகளின் முழு விபரங்களும் அடுத்த கூட்டத்தில் நாம் சமர்ப்பிப் போம் எனவும் குறிப்பிட்டார்.