28ஆம் திகதிக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து மேலும் 7பேர் கைதாவர்?
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு முன்னர் மேலும் 7 பேர் இந்த அணியிலிருந்து கைது செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது பஸில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அடுத்தக்கட்டமாக மற்றையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஒன்றிணைந்த குழுவினர் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
R-06




