செய்திகள்

280 பேர் நாளாந்தம் தற்கொலைக்கு முயற்சி , 14 பேர் உயரிழக்கின்றனர் : அனுரகுமார தகவல்

இலங்கையில் நாளாந்தம் 280 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கும் அதேவேளை 14 பேர் அதன்போது உயிரிழப்பதாகவும் இவர்களில் அதிகமானோர் இளம் வயதினரே என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 50 வீடுகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களும் 50 வீடுகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் கைதியொருவரும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற சோஷலிச இளைஞர் சங்கத்தின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் நாளொன்றுக்கு 14 பேர் என்ற ரீதியில்  தற்கொலை சம்பங்கள் இடம்பெறுகின்றன. இதேவேளை தினமும் 280 பேர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 10 முதல் 29 வயது வரையான நாளைய தலைமுறையினரே அதிகமாக உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இது மட்டுமன்றி நாட்டில் 50 வீடுகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை 50 வீடுகளுக்கு ஒரு கைதியும் சிறைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வருடாந்தம் 5200 பேர் வாகன விபத்துக்களில் இறக்கின்றனர். இவர்களில் அதிகமானோர் இளைஞர்களேயாகும். இந்த நிலைமையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு நாம் முதலில் தீர்வு காண வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
n10