செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுப்போம்: பழனி திகாம்பரம் (வீடியோ)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுப்பதே எமது நோக்கமென தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

‘புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி பெண்களுக்கு பணிநேரம் அதிகமாகவும் ஆண்களுக்கு குறைவாகவும் 750 ரூபாவுக்கு உட்பட்ட சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது’ என்றும் அவர் தெரிவித்தார்.

‘தோட்டங்கள் நட்டத்தில் இயங்கவில்லை. 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுப்பதே எமது நோக்கம். எம்மோடு இணைந்து போராடுங்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு தோட்ட தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் பெற்று கொடுப்பதாக கூறி ஏமாற்றி விட்டனர்.

 எனவே 1000 ரூபாய் வேதனம் கிடைக்கும் வரை போராடுவோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுண்ஸ்வீக் தோட்ட மக்கள் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் உட்பட பலர் அவ்விடத்துக்கு வருகைதந்து மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாங்கள் வாக்குறுதியளித்தது போல 7 பேர்ச் காணிகளை மக்களுக்கு பெற்றுகொடுத்து வருகிறோம். அதேபோன்று இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் வாக்குறதியளித்தது போல பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்கபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இதன்போது உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், ‘பெருந்தோட்ட மக்கள் என்றுமே 1000 ரூபாய் வேதனத்தை வழங்கும்படி கேட்கவில்லை. கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெற்றது.

மலையகத்தை பிரநிதிநிதித்துவபடுத்தும் தொழிற்சங்கமொன்று பெருந்தோட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபாய் வேதனத்தை பெற்று தருவதாக கூறி முன்னாள் ஐனாதிபதிக்கு வாக்கு திரட்டினர்.மலையக மக்கள் ஏமாறாமல் தற்போதைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க ஒட்டு மொத்தமாக வாக்களித்தனர். தோட்ட கம்பனிகள் 1000 ரூபாய் வேதனம் வழங்காவிடின் தற்போது தோட்ட மக்களாக வந்து வீதி மரியல் போராட்டம் செய்வது போல் அனைத்து தோட்ட மக்களும் போராட்டத்தில் இறங்குவர்’ என்றார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=akQgOvpqbMU” width=”500″ height=”300″]