செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன்வழங்க அரசாங்கம் நடவடிக்கை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி இயக்க போராளிகள்  5,754 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இறுதிகட்ட யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்களுக்கே இந்த சுயதொழில ஊக்குவிப்பு கடன் வழங்கப்படவுள்ளது.
குறித்த முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க 2012ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதன் கீழ் கடந்த 2014ஆம் ஆண்டு வரை 302 மில்லியன் ரூபா நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மேலதிகமாக 5,754பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அரச வங்கிகளினூடாக அவர்களுக்கு கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.