செய்திகள்

3 இலங்கையருலுக்கு சவுதியில் மரண தண்டனை: அமைச்சர் ஹக்கீம் பேச்சுக்கு விரைவு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையரையும் மீட்கும் நோக்குடன் ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளை சவூதி அரேபியா செல்லவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட கடிதமொன்றுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சவூதி செல்லவுள்ளார். மரண தண்டனை பெற்றுள்ள இலங்கையரை மீட்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தாம் பதவியேற்ற அன்றே முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் உதவி பெறப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதன்படி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சர் தலதா அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்தும் கடிதம் ஒன்றையும் கோரி இருந்தார்.

இக்கடிதத்துடன் இலங்கை ஜனாதி பதியின் விசேட தூதுவராக சவூதி மன்னர் குடும்பத்தை அமைச்சர் ஹக்கீம் சந்திக்க வுள்ளார். யேமன் நாட்டவரிடம் கொள்ளையிட்டது மட்டுமன்றி அவரை கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் மூவருக்கு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றுள்ள மேற்படி இலங்கையரை தண்டனையிலிருந்து மீட்பதற்காக அமைச்சர் தலதா அத்துகோரள நடவடிக்கை எடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைய மரண தண்டனைக்கு பதிலாக நிவாரணம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.